ஈரோடு: போக்சோ வழக்கில் டிரைவர் கைது

ஈரோடு மாவட்டம் குறிச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 49 வயது டிரைவர் ராஜா ராம், தனது வீட்டுக்கு அருகே வசிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாராம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி