இதில் ஹேண்ட் மேட் இன் இந்தியா திட்டத்தின் முதன்மை பயிற்சியாளர் த. நவீன்குமார் கலந்துகொண்டு திட்டத்தின் நோக்கம் மற்றும் பயிற்சிகள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது கைத்தறி துறையின் முக்கிய சவால்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக கைத்தறி தயாரிப்புகள் விற்பனைக்கு சமகால சந்தையில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் சிக்கல்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நெசவாளர்களும், வியாபாரிகளும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டு துறையின் முன்னேற்றத்திற்கு தேவையான பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல் உதவிகளை வழங்க வலியுறுத்தினார்கள்.