கொடுமுடி அடுத்த இச்சிபாளையத்தைச் சேர்ந்த குணசேகரன் - வனிதா தம்பதியினருக்கு கடன் பிரச்சனை காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5-ம் தேதி இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தால் விரக்தியடைந்த வனிதா, தனது தாயார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.