ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட எஸ். கே. சி. சாலையில் வசித்து வருபவர் பாப்பம்மாள், 106 வயதான இவருக்கு கணவன், குழந்தைகள் இல்லாமல் தனியாக வசிக்கிறார். இந்த நிலையில் கடந்த 11ம் தேதி வீட்டுக்குள் வந்த மர்ம நபர், மூதாட்டியின் பின்புறமாக வந்து கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தங்க செயினை பறித்து சென்றார். இச்சம்பவம் குறித்து மூதாட்டி பாப்பம்மாளின் உறவினரான காமராஜ், ஈரோடு நகர காவல் நிலையத்தில் உள்ள க்ரைம் போலீசில் புகார் தெரிவித்து இருந்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார் ஈரோடு மறைந்து இருந்த திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் விஜயகுமாரை, கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஐந்து பவுன் செயினை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விஜயகுமாரை , ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி