இந்த நிலையில் காய்கறி சந்தையில் கடை நடத்தி வரும் சஞ்சய் சொக்கலிங்கம் என்பவர் வழக்கம் போல தனது இரு சக்கர வாகனத்தினை நிறுத்திவிட்டு கடையில் வியாபாரம் செய்ய சென்று உள்ளார். அப்போது நள்ளிரவு சுமார் மூன்று மணி அளவில் மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்று உள்ளார். இச்சம்பவம் குறித்து சஞ்சய் சொக்கலிங்கம் வடக்கு காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் உள்ள ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மர்ம நபர் இரு சக்கர வாகனத்தினை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல காய்கறி சந்தைக்கு வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவதாகவும் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.