ஈரோடு: பீன்ஸ் விலை கடும் உயர்வு.. கிலோ ரூ. 144க்கு விற்பனை

ஈரோடு மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு, ஈரோடு, திண்டுக்கல், கரூர், சேலம், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனை ஈரோடு மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழைக்காரணமாக, ஈரோடு மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக, பீன்ஸ் வரத்து அதிகளவில் குறைந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 80க்கும் விற்கப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ் நேற்று முன்தினம் ரூ. 130க்கும், நேற்று ரூ. 144க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் வரத்து மேலும் குறைந்தால், அதன் விலை மீண்டும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி