நேற்று (ஜூலை 4) இரவு 8 மணி அளவில் வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் மாரிமுத்து ஆவின் பூத்தை பூட்டி சென்று விட்டார். பின்னர் இன்று காலை மீண்டும் ஆவின் பூத்தை திறக்க மாரிமுத்து வந்தார். ஆவின் பூத்தை திறந்து உள்ளே சென்றபோது கல்லாப் பெட்டியில் இருந்த ரூ. 10 ஆயிரத்து 500 மாயமாகி இருப்பதை கண்ட அதிர்ச்சி அடைந்தார். மேலும் பையில் இருந்த இரண்டு கிலோ சர்க்கரை மிக்ஸ் சாக்லேட்டுகள் போன்றவையும் மாயமாகி இருந்தது. இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது நேற்று நள்ளிரவு கடையின் இடது பக்க வழியாக இரும்பு ராட்டை பயன்படுத்தி நுழைந்த மர்ம நபர் கல்லாப் பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் தின்பண்டத்தையும் சாப்பிட்டு சென்று உள்ளார். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.