38 திட்டங்கள் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன

திமுக அரசு விடியல் பயணத்திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக அன்புச்சோலை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்திருப்பதாகவும் அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்துள்ளார். திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 38 திட்டங்கள் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 12 சதவீத வாக்குறுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகள் கூறுவது அவரது வேலை என்றும் அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி