ரேசன் அரிசி 1, 200 கிலோ பறிமுதல்: ஒருவர் கைது

ஈரோடு மாவட்டத்தில், குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அரச்சலூர் அருகே கொமராபாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஆம்னி காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 1200 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த அரச்சலூரைச் சேர்ந்த சதீஸ்குமாரை கைது செய்து ஈரோடு கிளைச்சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி