நேற்று இரவு மோட்டார் சைக்கிள் ஈரோடு -சத்தி மெயின் ரோடு, நாயக்கன் காட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு முன்னால் ஒரு சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு வளைவில் சரக்கு வேன் திடீரென திரும்பியது. இதை எதிர்பார்க்காமல் ஜாகிர் உசேன் சென்ற மோட்டார் சைக்கிள் சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜாகர் உசேன் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரது நண்பர் ரவிக்குமாருக்கும் காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அந்த வழியாக சென்றவர்கள் கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் ஜாகிர் உசேனை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ஜாகிர் உசேன் இறந்து விட்டதாக தெரிவித்தார். ரவிக்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
“தவெக ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது”.. முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு