கோபி தாசம்பாளையத்தில் 14 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் சிக்கினார் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே தாசம்பாளையம் பகுதியில் கோபி மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த கோகுல் (வயது 21) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வாலிபர் கோகுலை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.