ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே கேர்மாளம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி, திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், தனது எதிர் வீட்டில் வசிக்கும் 8 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை தினமும் காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.