கோபி அருகே சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த கெட்டிச்செவியூர், சாந்திபாளையத்தைச் சேர்ந்தவர் வேங்கையன் (60). தொழிலாளி. இவர் 14ம் தேதி மாலை காமராஜ்நகர்-அயலூர் ரோட்டில் நடந்து செல்லும்போது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ வேங்கையன் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக, அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அன்று இரவு வேங்கையன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி