ஈரோடு: வீட்டில் சாராயம் தயாரித்த தொழிலாளி கைது

ஈரோடு மாவட்டம் கோபி அருகே நாக தேவ பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (58) என்பவர் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், போலீசார் உடனடியாக வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 4 லிட்டர் சாராயம் மற்றும் 60 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கோபி மதுவிலக்கு போலீசார் சின்னசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி