இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி ஜெயக்குமாரும் ரேவதியும் வேலைக்கு சென்று விட்டனர். மாலை ரேவதியும் வீட்டுக்கு வந்து கதவு திறந்து உள்ளே சென்றார். வீட்டு அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது 15 பவுன் நகையும், ரூ. 7,500 ரொக்க பணமும் திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டு பூட்டு உடைக்கப்படாமல் எப்படி பணம் மாயமானது என்பது குறித்து ரேவதி குழம்பினார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் வசிக்கும் மணிமேகலிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்தான் நகை பணத்தை திருடியது தெரியவந்தது. அதாவது ஜெயக்குமார் தொலைத்த வீட்டு சாவி மணிமேகலிடம் கிடைத்துள்ளது. அதை அவர் பத்திரமாக வைத்துக் கொண்டு வீட்டில் ஆள் இல்லாத சமயத்தில் பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் பணத்தை திருடியது தெரிய வந்தது.