விளாங்கோம்பை மாணவர்களுக்கு வேன் வசதி

டி.என். பாளையம் அருகே உள்ள வினோபா நகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள விளாங்கோம்பை மலை கிராமத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்களைச் சேர்ந்த 30 மாணவ மாணவியர் கொங்கர் பாளையம் உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். 18 வருடங்களாக சரக்கு வாகனத்தில் சென்று வந்த மாணவர்களுக்கு, பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிதாக வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் மூலம் தற்போது மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி