பங்களாப்புதூர் அருகே தனியார் மதுபான கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் பைக்கில் வந்த வினோத் குமார் மற்றும் அம்மாசை ஆகியோரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, தனியார் மதுபான கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரம் கைது செய்யப்பட்டனர்.