கடம்பூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மாதவன் மற்றும் கும்பேஸ்வரன் ஆகியோரை சோதனையிட்டதில், கர்நாடக மாநிலத்திலிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 500 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்த காவல்துறையினர், கோபி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி