கோபி அருகே வேலுமணி நகரைச் சேர்ந்த ராஜன்(77), மே 28 மதியம் 1:30 மணியளவில் சத்தி ரோட்டில் டிவிஎஸ் 50 வண்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோபியைச் சேர்ந்த கோகுல்(30 புல்லட்டில் வந்து, ராஜன் ஓட்டிச் சென்ற டிவிஎஸ் 50 மீது மோதியதில் ராஜன் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து கோபி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.