கொடிவேரியில் குதூகலித்த சுற்றுலா பயணிகள்

கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அணையில் தண்ணீர் அருவி போல கொட்டுவதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இன்று விடுமுறை தினம் என்பதால் ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பலர் குடும்பத்துடன் வந்து அருவியில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். வெயிலில் இருந்து தப்பிக்கும் வகையில் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர். 

மேலும், பரிசல் பயணம் மேற்கொண்டு பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்ந்தனர். மற்றும் தங்கள் கொண்டு வந்த உணவுகளை உண்டு, கடைகளில் விற்கப்படும் பொரித்த மீன்களை வாங்கி உண்டும் சுற்றுலா பயணிகள் தங்கள் பொழுதை குடும்பத்துடன் கழித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பங்களாபுதுர், கடத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி