ஈரோடு வடக்கு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி, கோபி நகரம் வார்டு -1 பகுதியைச் சேர்ந்த மாற்று கட்சியினர், அக்கட்சியிலிருந்து விலகி, கோபியில் உள்ள திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வின்போது கோபி நகரச் செயலாளர் மற்றும் கோபி நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் மற்றும் நகர கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.