ஈரோடு: கோயிலில் திருடியவர் கைது

ஈரோடு மாவட்டம், கொளப்பலூர் அடுத்த கும்மிகருவில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோயிலில் செம்பு தட்டு, சொம்பு, கோயில் மணி ஆகியவை திருடு போனதாக சிறுவலூர் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடத்தூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மது அருந்த பணம் இல்லாததால் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. திருடிய பொருட்களை விற்று மது அருந்தியதாக அவர் ஒப்புக்கொண்டார். கொளப்பலூர் அருகே சந்தைக்கடை பகுதியில் சுற்றித்திரிந்த அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி