ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆய்வு மேற்கொண்டார். அங்கு வெண்ணெய், ஐஸ்கிரீம், பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், ஆவினில் தயாரிக்கப்பட்ட குல்பி ஐஸ்கிரீமையும் அவர் சுவைத்தார்.