கோபி: மோட்டார் சைக்கிள் மீது முறிந்து விழுந்த மரம்

கோபி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போதும் பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில் நேற்று பகலில் கோபியில் வெயில் கொளுத்தியது. மதியம் 2.30 மணி அளவில் மழை லேசாக தூறியது. அதன்பின்னர் இரவில் பலத்த காற்று வீசியது. 

இதில் கோபி-சத்தி மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு வலுவிழந்து காணப்பட்ட வேப்ப மரத்தின் கிளை முறிந்து ரோட்டில் சென்ற ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் மீது விழுந்தது. இதில் ஸ்கூட்டரில் சென்ற பெண், மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் லேசான காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று மரக்கிளையை வெட்டி அகற்றினர். மேலும் இதுகுறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி