கோடை விடுமுறையையொட்டி ரெயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, போத்தனூரில் இருந்து ஈரோடு வழியாக மேற்கு வங்க மாநிலம் காரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்-06065) நாளை சனிக்கிழமை (மே 30, ஜூன் 6) இரவு 11 மணிக்கு இயக்கப்படுகிறது. மேலும், மேற்கு வங்க மாநிலம் காரக்பூரில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் (வண்டி எண்-06066) மே 25, ஜூன் 1, ஜூன் 8 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்படும் என சேலம் கோட்ட ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.