கோபி தொகுதியில் போட்டியிடும் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே த.வெ.க. மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். கோபி தொகுதியில் போட்டியிடுவதற்காக நாளை (பிப்ரவரி 6) சென்னையில் கட்சி அலுவலகத்தில் விருப்பமனு அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தை த.வெ.க.தான் ஆளப்போகிறது என்றும், இது நகைச்சுவை அல்ல, சீரியஸாக கூறுவதாகவும் அவர் கூறினார். த.வெ.க. தனித்து போட்டியிடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும், மவுனம் வெற்றிக்கு அறிகுறி என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி