தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி விவசாயக் கடன்களை உடனடியாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஈரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடந்த தேர்தல் சமயத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.