கோபி: செங்கோட்டையன் பண்ணை வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு மாவட்டம் கோபி அருகே குள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் இருந்தபோது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவுடன் அந்தப் பாதுகாப்பு விலக்கப்பட்டது. தற்போது, கோபியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அவரது வீட்டிற்கு, ஈரோடு ஆயுதப்படையைச் சேர்ந்த இரண்டு போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி