ஈரோடு: பெண்களும் இளைஞர்களும் மாற்றத்தை விரும்புகின்றனர்; செங்கோட்டையன்

ஈரோடு, கோபியில் வெள்ளாங்கோவிலில் தவெக கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய செங்கோட்டையன், தமிழகத்தில் பெண்களும் இளைஞர்களும் பெரிய மாற்றத்தை விரும்புவதாகக் கூறினார். 50 ஆண்டுகால அரசியலில் அனுபவம் பெற்ற தான், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டதையும், தற்போது சிலர் இணையத் துடிப்பதாகவும் தெரிவித்தார். தளபதி விஜய், திமுக-வுடன்தான் போட்டி என்றும், மற்ற கட்சிகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும் தெளிவாகக் கூறியதாக அவர் குறிப்பிட்டார். கூட்டணிக்காக சிலர் தலைகீழாக நிற்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி