ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் வேம்பத்தி ஊராட்சிக்கு உட்பட்ட மாலா கோவில் தோட்டத்தில் வசிக்கும் 60 குடும்பங்களுக்கு கடந்த 30 நாட்களாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால், கிராம மக்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரட்டுப்பாளையம், ஆப்பக்கூடல் பகுதிகளுக்கு தினந்தோறும் மோட்டார் சைக்கிளில் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதாவிடம் மனு அளித்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.