கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, திருப்பூர் வடக்கு, அவிநாசி, சூலூர், பவானிசாகர், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த அத்திக்கடவு அவிநாசி திட்டம் மூலம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் 6 நீரேற்று நிலையங்களில் 4 மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. 6 நீரேற்று நிலையங்களும் சரியான முறையில் இயக்கி குளங்களுக்கு தண்ணீர் வழங்கி இருந்தால் அனைத்து ஏரி குளங்களுக்கும் தண்ணீர் சென்றிருக்கும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
4 நாட்கள் கோடை மழை: உள், கடலோர மாவட்டங்களில் வாய்ப்பு