48 கர்நாடகா மது பாட்டில் பறிமுதல் ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த சுஜில்கரை அளகர்தொட்டி பகுதியில் கர்நாடக மதுபானங்கள் சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தனிப்பிரிவு காவலர்கள் நடத்திய சோதனையில், அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கர்நாடக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 48 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி