இந்நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதையில் உள்ள சாலையோரம் மதில் சுவர் ஒன்றில் சிறுத்தை ஒன்று படுத்து இருந்தது. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை சற்று தொலைவிலேயே நிறுத்தினர். பதில் சுவரில் சிறிது நேரம் படுத்திருந்த சிறுத்தை பின்னர் சாலையைக் கடந்து மெதுவாக வனப் பகுதிக்குள் சென்றது. அதன் பிறகு அங்கிருந்து வாகனங்கள் கிளம்பி சென்றன. சிறுத்தை மதில் சுவரில் படுத்திருந்ததை அங்குள்ள வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
நடிகை வீட்டில் நண்பர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை