பவானிசாகர்: பணம் தர மறுத்த தாய், சகோதரி மீது தாக்குதல்

பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலா என்பவரின் மகன் ஜீவானந்தம். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச் செல்லாமல் தாயையும் தங்கையையும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். குடிக்க பணம் தர மறுத்ததால், மதுபோதையில் இருந்த ஜீவானந்தம், தனது தாய் சகுந்தலா மற்றும் தங்கை ஜீவிதா ஆகியோரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில், ஜீவானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி