மழைநீர் வடிகால் பணிகளுக்கு எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம் பூமி பூஜை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கூகலூர் பேரூராட்சியில், வார்டு எண் 7ல் தாழைக்கொம்புதூர் பகுதியில் பொதுமக்களின் நீண்டகால பிரச்சனையான மழைநீர் வடிகால் மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிகளை, நகர்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் எம்எல்ஏ பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். ஒன்றிய கழக செயலாளர் கோரக்காட்டூர் ரவீந்திரன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி மாரப்பன், துணைத் தலைவர் தராஜாராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், 1 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை வசதியும் அமைக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி