இதனால் நேற்று முன்தினம் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தகாத வார்த்தையால் பொன்னுச்சாமியை பேசியுள்ளார். மேலும் தான் கையில் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த பொன்னுச்சாமி கோபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கோபி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்