கோவை: மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

கோவை மாநகரில், தாளவாடியைச் சேர்ந்த மகேஷ் (32) என்பவர், ஜவுளி கடையில் வேலை செய்யும் 20 வயது மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து அப்பெண் தனது தாயாரிடம் தெரிவிக்க, அவர் மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மகேஷை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி