கர்நாடக மது பாட்டில் விற்பனை செய்த ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் கோட்டமாளம் பகுதியில் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோட்டமாளம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்டையன் என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 34 கர்நாடக மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி