இதில் கழக தொண்டர்கள் மகளிர் அணியினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37ஆம் ஆண்டு நினைவுதினத்தை அனுசரிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கோபிசெட்டிபாளையத்தில் நகரசெயலாளர் பரிணியோ கணேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மற்றும் நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.