திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஜென்மம் மலைப்பாதையில், மைசூரில் இருந்து கரூருக்கு பிளைவுட் ஏற்றிக்கொண்டு வந்த அசோக் லேலண்ட் லாரி, திம்பம் மலைப்பாதையின் 20வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி ஓட்டுநர் மாதேஸ்வாமி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

தொடர்புடைய செய்தி