பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே இருந்த மதுகடை மூடப்பட்டது

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த 3669 பதிவெண் கொண்ட அரசு மதுபான கடை, மது அருந்தும் நபர்கள் பயணிகளிடமும் பொதுமக்களிடமும் ரகளை ஈடுபட்டதால் மூடப்பட்டது. பொதுமக்கள் அளித்த புகார்களுக்குப் பிறகு, முதலமைச்சர் அறிவிப்பின்படி 717 கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பேருந்து நிலையம் அருகில் இருந்த இந்தக் கடை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர், பொதுமக்கள் இதனை வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி