ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த டி. என். பாளையம் டி. ஜி. புதூர் அருகே உள்ள காளியூர் பிரிவு என்ற இடத்தில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மது விற்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சத்தியமங்கலம் தொட்டம்பாளையம் பங்களாமேடு பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 43) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன