ஈரோடு: இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார், இருசக்கர வாகனத்தில் பித்தளை பாத்திரங்கள் வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு புளியம்பட்டி பகுதியில் வியாபாரம் முடித்துவிட்டு சத்தியமங்கலம் நோக்கி வரும்போது, நல்லூர் அருகே இரட்டைப் பாலத்தில் வளைவில் திரும்பும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பிரவீன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புளியம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி