ஈரோடு மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் துரைசாமி பேட்டி

ஈரோடு மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் துரைசாமி, ஆன்லைன் மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, வரும் மே 20ஆம் தேதி புதன்கிழமை அன்று தமிழகம் முழுவதும் மருந்துக் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தொடர்புடைய செய்தி