கடந்த 2019-ம் ஆண்டு முதல் பட்டாசு தயாரித்து வரும் இவர்கள் கடந்த 2023-ம் ஆண்டு உரிமத்தை புதுப்பிக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் பழனிச்சாமியும், ருக்மணியும் தொடர்ந்து உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரித்து வருவதாக நம்பியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் பழனிச்சாமியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் பட்டாசு தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கணவன், மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து, வீட்டில் வைத்திருந்த வாணம், மத்தாப்பு, பட்டாசு உள்ளிட்ட 750-க்கும் மேற்பட்ட வெடிகளையும் பறிமுதல் செய்தனர்.