ஈரோட்டில் அதிவேக இருசக்கர வாகன விபத்து.. ஒருவர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே கள்ளாங்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிசாமி, திங்களூர் மாரியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சாலையைக் கடக்க முயன்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு காது மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி