கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று (மே 24) காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலைக்கு மேல் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, பேருந்து நிலையம், குள்ளம்பாளையம், கரட்டடிபாளையம் உள்ளிட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி