ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் அருகே உள்ள வெள்ளாங்கோவில் அண்ணா நகரில் கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சிறுவலூர் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு மளிகைக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளரான பால்ராஜ் (வயது 53) என்பவரை கைது செய்தனர்.