ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் செங்கோட்டையன் வெற்றிபெற்றார். தொடர்ந்து அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தநிலையில், மூத்த நிர்வாகியும், ஆட்சியில் அனுபவமும் வாய்ந்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்று எதிர் பார்த்து வந்தநிலையில் தற்போது நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.