தமிழக அமைச்சரவை விரிவாக்கம் இன்று (மே 21) நடைபெற்றது. இதில் நிதி அமைச்சராக இருந்த மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் சட்டப்பேரவை விவகாரங்கள் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை புதிய அமைச்சர் மரிய வில்சனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.